ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து : மூவர் காயம்!!

241

அம்பாறை, பக்கிஎல்ல, ரஜகலதென்ன பிரதேசத்தில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில்,

கொனகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.