
சிவகார்த்திகேயன் என்றாலே அவரது நகைச்சுவை தான் முதலில் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு தன் பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்தவர்.
ஆனால் சமீபத்தில் ஒரு நிகழ்வு சிவாவை உச்சக்கட்ட கோபத்திற்கு கொண்டு சென்றுள்ளது. டாணா, ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு நடித்து தருவதாக உறுதி செய்திருந்தார் இவர்.
ஆனால் சமீபத்தில் இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்ட படம் பெரும் தோல்வியடைந்ததால், அடுத்த படத்தை தொடங்குவதற்கு யோசித்து வருகிறதாம்.இதனால் கோபமடைந்த சிவா என்னை வைத்து படமெடுக்க 100 கம்பெனி வெயிட்டிங், நீங்கள் மேலும் இப்படி செய்து வந்தால், உங்கள் அட்வான்ஸை வாங்கி கொள்ளுங்கள்’ என்று கோபத்துடன் கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.





