ஜெயம் ரவியை கண்காணிக்கும் நயன்தாரா!!

438

Jayamravi

தனக்கு கொடுக்கப்படும் எந்தவிதமான கதாபாத்திரத்தையும் தைரியமாக நடிப்பவர் நயன்தாரா. இவர் தற்போது ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கடல் படத்திற்கு பிறகு அரவிந்த் சாமி ஒரு முக்கிய ரோலில் நடிக்க, தடையற தாக்க படத்தின் மூலம் நம் எல்லோர் மனதையும் கவர்ந்த வம்சி வில்லனாக நடிக்கிறார்.

இதில் நயன்தாரா, ஜெயம் ரவியை கண்காணிக்கும் ரகசிய பொலிஸாக நடிக்கவுள்ளார், மேலும் இவருக்கு படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் இருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.