
உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தர வரிசையில் நைஜீரியா முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நைஜீரியா முதலிடத்தையும் இலங்கை இரண்டாம் இடத்தையும் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
வாழ்க்கைத் தரம் மோசமான நாடுகளின் வரிசையில் நைஜீரியா பூச்சிய புள்ளிகளுடன் முதலிடத்தையும் 61 புள்ளிகளுடன் இலங்கை இரண்டாம் இடத்தையும் 73 புள்ளிகளுடன் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்காள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கச் செலவு, பாதுகாப்பு, சுகாதார, போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டு தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் லக்ஸ்சம்பேர்க் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





