யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்!!

268

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாரிய படலப் பட்டத்தை தொடுவையாக இணைத்து பறக்க விட முற்றப்பட்ட போது பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு வடத்தில் தொங்கிய நிலையில் பறந்து பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பட்டங்கள் ஏற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்கள் குழுக்களாக பாரிய அளவிலான பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் மிகச் சிறப்பாக விதம் விதமாக விசித்திரமான பட்டங்களை கட்டி ஏற்றி தனக்கென மிக சிறந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

நேற்றும் வல்வெட்டித்துறை றெயின்போ (Rainbow) விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கூடி பாரிய பட்டங்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் சக நண்பர்களால் பாதுகாப்பாக குறித்த நபர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளார்.