மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி!!

199

வரகாபொல பகுதியில் உள்ள ஒரு வயலில் மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதியினரே நேற்று மதியம் இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஆண் 60 வயதுடையவர் எனவும் பெண் 58 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வயலை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய இருவரும் வரகாபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை பொருத்திய ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.