உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழப்பு!!

19

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழந்துள்ளர். இளம் தலைமுறையினர், மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறாமல் யூடியூப் பார்த்து சுய மருத்துவம் மேற்கொள்ளும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருகிறது.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் – விஜயலெட்சுமி தம்பதியின் மகள் 19 வயதான கலையரசி.

தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வரும் இவர், தனது பெற்றோரிடம் தான் அதிக இருப்பதாக அடிக்கடி கூறி வருத்தப்பட்டுள்ளார். அதெல்லாம் ஒன்றுமில்லை என அவரது பெற்றோர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

இதனையடுத்து யூடியூபில் எடை குறைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த கலையரசி, அதில் கூறியபடி நாட்டு மருந்து கடைக்கு சென்று வெங்காரம் என்பதை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

வெண்காரம் என்பது வெண்மை நிறத்தில், துவர்க்கும் தன்மை கொண்ட ஒரு உப்பு பொருளாகும். இது சோப்பு, சலவை சோடா தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

அதை சாப்பிட பின்னர் அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும், அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் வெளியேறுவதாக தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.