
கேகாலை – தீவல வீதியின் எவுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7,58,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் திகதி பதுளையைச் சேர்ந்த 25 வயதுடைய பெண், ஹெட்டிமுல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோய்வாய்ப்பட்டிருந்த தனது சகோதரரின் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம நபர் ஒருவரால் இவர் வழிமறிக்கப்பட்டுள்ளார்.
எவுங்கல்ல பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை வைத்து வீதியை மறைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளது.
போது, காட்டு பகுதியில் இருந்து வந்த இளைஞன் ஒருவன் நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இரண்டு பவுண் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பென்டன் ஆகியவையே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி வழியாக வரும் போது முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் தன்னைச் சந்தேகத்திற்கிடமான முறையில் முந்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





