
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர், செயின்ட் கேலன்(St. Gallen) நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
நாடாளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச் மொழியிலும் விளக்கியுரைத்துடன் தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும் அவையரங்கில் வழங்கப்பட்டது.





