யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து : அரச உத்தியோகஸ்தர்களுக்கு நேர்ந்த கதி!!

288

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் பயணித்துள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைதுள்ளனர்.

இந் நிலையில் , விபத்து மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.