போதையில் தூங்கிய கணவர் : கயிற்றால் கொலை செய்து நாடகமாடிய மனைவி!!

36

ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்த சுதீர் ரெட்டிக்கும், அவரது மனைவி ஞான பிரசன்னாவுக்கும் இடையே சந்தேகத்தால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தினமும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுதீர் ரெட்டி, மனைவியின் நடத்தையைப் பற்றி தவறாக பேசி தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவர் தூங்கியதும், ஆத்திரமடைந்த ஞான பிரசன்னா கயிறால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, கணவர் மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடி உறவினர்களை நம்ப வைக்க முயன்றுள்ளார்.

ஆனால், சுதீர் ரெட்டியின் சகோதரி அளித்த புகாரால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ஞான பிரசன்னாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.