
ஹப்புத்தளை – கிரவனாகம வீதியில் ஹல்தும்முல்ல, சொரகுனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பஸ்களில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலை மற்றம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





