
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததினால் இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை 12,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் முதன் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.
அதன்படி இன்று காலை இலங்கை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 385,000 ரூபாயாகவும் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 356,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





