பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல் : அதிர்ச்சி சம்பவம்!!

75

திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல், அவரது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் பீஹாரிலுள்ள வைஷாலி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த சரிதாவுக்கும் சத்யேந்திர குமார் என்பவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், யாரோ சிலர் ஒரு ஜீப்பில் வந்து சரிதாவின் உயிரற்ற உடலை அவரது பெற்றோர் வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

காலையில் தங்கள் மகள் தங்கள் வீட்டு வாசலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்ட பெற்றோர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் CCTV கமெராக்களை ஆராயும்போது, ஜீப் ஒன்றில் வந்த சிலர் சரிதாவின் உடலை அவரது வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த ஜீப் சப் இன்ஸ்பெக்டரான சந்தோஷ் ரஜக் என்பவருக்கு சொந்தமானது.

இந்த சம்பவம் பொலிசாருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே சரிதாவின் கணவர் வீட்டார் மீது வரதட்சணைப் புகார் உள்ளதால், அவரது கணவர் உட்பட ஐந்து பேரை விசாரணைக்குட்படுத்திவருகின்றனர் பொலிசார்.