பிறந்த நாளில் நேர்ந்த துயரம் – கோர விபத்தில் உயிரிழந்த மாணவன்!!

294

களுத்துறை, பதுரலிய பகுதியில் தனது பிறந்தநாளுக்கு மறுநாள், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 18 வயதான ஹசிந்து தேமியா விஜயதுங்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் C.W.W கன்னங்கர மத்திய கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது பிறந்தநாளுக்கு மறுநாள், பதுரலிய கலுகல வீதியில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ​​மோட்டார் சைக்கிள் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாணவன் உயிரிழந்துள்ளார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் இமேஷா துஷான் குமார படுகாயமடைந்து களுத்துறை – நாகொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.