
பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சைட் அஜ்மலில் பந்துவீச்சு முறை சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதென சுதந்திர பகுப்பாய்வாளர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சைட் அஜ்மலுக்கு பந்துவீச்சுத் தடை விதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காலியில் இடம்பெற்ற இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அடுத்து சைட் அஜ்மல் முறையற்ற வகையில் பந்துவீசுவதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதனால் சைட் அஜ்மலுக்கு தற்காலிக பந்துவீச்சுத் தடை விதிக்கப்பட்டு அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் சைட் அஜ்மலின் பந்துவீச்சு முறை தவறானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளதென சர்வதேச கிரிக்கெட் சபை இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





