
கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸன் இந்த பிரபஞ்சத்தையே அழித்துவிடும் என பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடவுள் துகள் என்பது ஒரு அணு. இது புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron), எலெக்ட்ரான் (Electron) ஆகிய துகள்களைக் கொண்டது.
இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க் (Guvaark), பெர்மியான் (Bermiyon), குளுயான்ஸ் (Gluyans) ஆகிய துணை அணுத் துகள்களால் (Sub atomic particles) ஆனது.
ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால் உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.
சுமார் 100 பில்லியன் கிகா-எலக்ட்ரானின் (Giga Electron) அதிகமான ஆற்றலில் கடவுள் துகள் பெரிய நிலைத்தன்மையை பெறலாம்.
இதனால் “பேரழிவு வெற்றிட சீர்கேடு” (Catastrophic vacuum decay) ஏற்பட்டு காலம், நிலைகுலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது.
இத்தகைய நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது வருவதை நம்மால் பார்க்க முடியாது என்றும் இதனை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விடவோ, அலட்சியம் காட்டவோ முடியாது எனவும் கூறியுள்ளார்.





