வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பிரபல நடிகை!!

730

Apoorva

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் மலையாள நடிகை அபூர்வா போஸ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 150க்கும் மேற்பட்ட மலையாளிகள் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள காஷ்மீரில் சிக்கியுள்ளனர்.

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமாகி 5 படங்களில் நடித்துள்ள நடிகை அபூர்வா போஸ் உள்பட 11 பேர் காஷ்மீரில் மலையேறும் பயிற்சிக்காக சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் வரை நடிகை அபூர்வா போஸ் கொச்சியில் உள்ள தனது வீட்டினருடன் தொலைபேசியில் பேசிய நிலையில் அதற்கு பின்னர் அவர் உள்பட யாரும் வீட்டில் தொடர்பு கொள்ளவில்லை.

திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டி கூறுகையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 150க்கும் மேற்பட்ட மலையாளிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது 5 ஹோட்டல்களில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அவர்களை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.