வெள்ளத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றிய வட்ஸ் அப்!!

1427

whatsapp

ஜம்மு-காஷ்மீர் வெள்ள மீட்பு பணியில் பலரது உயிரை காப்பாற்ற சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வட்ஸ் அப் போன்றவை பெரிதும் உதவியுள்ளது.

காஷ்மீரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பொது மக்கள் பலரும் சிக்கித் தவித்துள்ளனர்.
இதையடுத்து இந்திய ராணுவம் நடத்திய மீட்பு பணியின் போது சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், மற்றும் வட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளது.

இது வெள்ளம் புகுந்த பல பகுதிகளில் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்க உதவியது.

இந்திய ராணுவ தலைமையகத்தின் இணையத்தள பக்கத்தில் பெறப்படும் குறுஞ்செய்திகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ள ராணுவக் குழுக்களின் சீனியர் கமாண்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதை வைத்து மீட்பு படையினர் சம்பவ இடத்தை கண்டுபிடித்து விரைந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் அனுப்பிய 450க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வட்ஸ் அப் வழியாக ராணுவத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.