தந்தை அர்ஜூன் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி : ஐஸ்வர்யா!!

562

Arjunநடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா. இவர் பட்டத்து யானை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார். அடுத்து அர்ஜூன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மகளுக்காகவே பிரத்யேகமான கதையை அர்ஜூன் தயார் செய்து உள்ளாராம்.

தற்போது ஜெய்ஹிந்த் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இதில் அவரே நாயகனாக நடித்து இயக்கவும் செய்கிறார். இந்த படம் முடிந்ததும் மகள் ஐஸ்வர்யாவை வைத்து இயக்கும் படவேலைகளை துவங்குகிறார். இதில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது..

எனது தந்தை இயக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரம் தந்தை முன்னால் நின்று நடிப்பதற்கு பயமாகவும் இருக்கிறது. இது எனக்கு புது அனுபவமாக இருக்கும்.

என் தந்தை இயக்குனர் மட்டுமன்றி நடிகராகவும் இருப்பதால் படப்பிடிப்பை எப்படி நடத்த வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஜெய்ஹிந்த் படப்பிடிப்புக்கு நேரில் போய் நான் பார்த்து இருக்கிறேன். எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும்.

நான் நடிக்கும் படத்துக்கான கதை தயாராகி விட்டது. காதல் கதை. கதாநாயகிக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்காது எல்லா கரக்டர்களுக்கும் முக்கியம் இருக்கும் என்று தெரிவித்தார்.