
தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால் இப்படத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்ததால் தான் தன்னால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியவில்லை என்று தனுஷ் கூறுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றது.
இதைக்கண்டித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிர்வாகம், இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும், இது மாணவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது என்று வழக்கு தொடர்ந்தனர்.
இது குறித்து வெளியான தீர்ப்பில் விவேகானந்தர் உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை புறக்கணியுங்கள் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார், இதை மனதில் கொண்டு சில விஷயங்களை எதிர்ப்பதை விட அவற்றை புறக்கணிப்பதன் மூலம் மக்கள் மனதில் இருந்து விரைவில் அது தொடர்பான நினைவுகளை அகற்றி விட முடியும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.





