
அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக சாரதி உயிர் தப்பியுள்ளார்.
ஒலுவில் பிரதேசத்தில் நேற்று (06) மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது வாகனத்தில் இருந்த ஏராளமான நெல் மூட்டைகள் வீதியோரத்தில் கால்வாயிலும் சிதறிக்கிடந்துள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





