தலை சுற்றவைக்கும் தங்கத்தின் விலை : கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிரடி மாற்றம்!!

476

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 365,400 ரூபாவாக காணப்படுகிறது.

முன்னதாக இலங்கையில் தங்கத்தின் விலையானது 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்திருந்தது.

இவ்வாறான சூழலில் தங்கத்தின் விலை மீண்டும் நான்கு இலட்சத்தை நெருங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலக சந்தையில் தங்கத்தின் விலையானது மீண்டும் 5000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் (09.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

ஏற்கனவே தங்கத்தின் விலையானது உலக சந்தையில் ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியிருந்த போதும் அதன்பின் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.

இந்த நிலையிலேயே மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் இன்று அதிகரிப்பு பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.