
தற்கொலையை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அர்ப்பணிப்பை ஏற்படுத்துதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இலக்காக கொண்டு இந்த தினம் ஒவ்வொரு வருடமும் செம்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது.
தற்கொலை தடுப்புக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை மூலம் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்தாபனத்தின் இந்த அறிக்கையின் மூலம் 40 செக்கன்களுக்கு ஒருவர் தற்கொலை செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலேயே தற்கொலை மூலமான உயிரிழப்புக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
தற்கொலை எந்தவொரு வயதினரும் தூண்டப்படலாம் என்பதுடன் உலகளாவிய ரீதியில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆவ்வொன்றின் இலங்கை தற்கொலை வீதத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் மூவாயிரம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்கொலைக்கான காரணங்கள் என்று பார்க்கும் போது தற்பொழுது அதிகளவில் சமூக வலைத் தளங்களின் உடாக ஏற்படும் நட்பு, காதல் போன்றவற்றால் ஏற்படும் மனக் கசப்புக்கள் தற்கொலை செய்யத் தூண்டுகின்றன.
சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவரிடம் நட்பு பாராட்டி, அன்பை வாரி இறைத்து அதில் ஏமாற்றம் மிஞ்சும்போதும், சிறு சிறு குடும்பச் சண்டைகளுக்கு உணர்ச்சி வசப்பட்டும் இளைஞர்கள் மத்தியில் தற்கொலைகள் நடக்கின்றன. ஆனால், அதைவிட முதியவர்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் பரிதாப நிலை. .
அடுத்த நொடி உயிருடன் இருக்க மாட்டோம் எனத் தெரிந்தும் தற்கொலை செய்துகொள்ள துணி வோருக்கு, வாழ்க்கையில் எது எதிர்வந்தாலும் போராடி வெல் வோம் என்ற தைரியத்தை கொடுக் கக்கூடிய வாழ்வியல் போக்கு இல் லாமல் இருப்பதும் இந்தத் தற் கொலைகளுக்கு காரணமாகிறது.
முதியோர்களை மதித்து பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உள்ளது. குழந்தையாக இருக்கும்போது வாரி அணைத்து வழிகாட்டிய பெற்றோரை, முதுமை காலத்தில் அவர்களை குழந்தையாக பாவித்து, காத்தால் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.





