யாழில் வீதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண் : வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு!!

641

Sucide

யாழ். வடமராட்சி தம்பசிவம் சந்தியில் நேற்று பெண்ணொருவர் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் சீதாதேவி (38) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண், அவரது வீட்டில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் எரிந்த நிலையில் நடுவீதியில் கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் அம்புலன்ஸ் மூலம் குறித்த பெண்ணை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.