வவுனியா முத்தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!!

885

muthamil

பதிவு செய்யப்பட்ட இலங்கை முத்தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாக் தெரிவு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முத்தமிழ் சங்கத்தின் புதிய தலைவராக நடராசா ஜனகதீபனும் (ஜனகன் ),செயலாளராக தவராசா தர்சனும் பொருளாளராக தேவேந்திரன் மகேஸ்வரியும் தெரிவாகியுள்ளனர் .

இவர்களுடன் உபதலைவராக வேகாவனம் பிரதீபன், உபசெயலாளராக தவராசா நிரோஷனும், ஒருங்கிணைப்பாளராக பரமேஸ்வரன் கார்தீபனும், ஊடக இணைப்பாளராக திருப்பதி பாஸ்கரனும், கொள்கை பரப்பு செயலாளராக சிவராஜா பவதர்ஷனும், நிர்வாக உறுப்பினர்களாக கணேசலிங்கம் சுரேஷ்காந்த், தங்கராசா செந்தூரன், ஸ்ரீகரன் சரண் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளத்தை தளமாக கொண்டுள்ள முத்தமிழ் சங்கம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் தமிழ் மற்றும் சமய கலாச்சார வளர்சிக்கான முழுநேர பணியாற்ற உள்ளதாகவும் ஏனைய சங்கங்களினால் புறக்கணிக்கப்பட்ட கலை கலாச்சார ஆர்வலர்கள் அரசியல் காரணங்களுக்காக புறம்தள்ளப்பட்ட திறமைசாலிகள் இலைமறை காய்களாக கிராமங்களில் வாழ்கின்ற கலை வல்லுனர்கள் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு பயனிப்பதுவேபுதிய நிர்வாகத்தின் இலக்கு எனவும் அச் சங்கத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.