
வவுனியா கண்டி வீதியில் உள்ள தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ9 வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் தேக்கவதையை சேர்ந்த சுதாகர் (21) தவசிகுளததை சேர்ந்த டொல்சி(2)ஆகியோரே காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
வவுனியா நகரப்பகுதியிலிருந்து கண்டி வீதி வழியாக பயணித்த முச்சக்கர வண்டி தேக்கவத்தை பகுதியில் தீடீரென குறுக்கு வீதியில் திரும்பியது. இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியது.
அத்துடன் எதிரே வந்த சைக்கிளும் முச்சக்கரவண்டியுடன் மோதிக்கொண்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் சைக்கிளில் வந்தவரும் காயங்களுக்குள்ளாகினர்.





