மீண்டுமொரு தாழமுக்கம் : நாளை முதல் கடும் மழை!!

268

தெற்கு வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் இனிவரும் நாட்களில் அது தாழமுக்கமாக மாறி வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வாளர், பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெப்ரவரி மாதத்தில் இத்தகைய தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவது மிக அரிதாக இருப்பின், நாளை (17.02.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது, எதிர்வரும் 24.02.2026 வரை தொடரவும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஊவா, மத்திய, வட மத்திய, மேல், சபரகமுவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் இம்மழை நாளை முதல் (17.02.2026) எதிர்வரும் 24.02.2026 வரை பரவலாக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

அதேவேளை, ஏற்கெனவே மழை கிடைத்து வரும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளதோடு,

நாளை முதல் மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளிலும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை முதல் (17.02.2026) எதிர்வரும் 24.02.2026 வரையான காலப்பகுதியில் ஏனைய பகுதிகளை விட கிழக்கு, வடக்கு ,ஊவா மத்திய மாகாணங்கள் திரட்டிய மழை வீழ்ச்சி அதிகமாகக் கிடைக்கும் என்பதனால் இந்த மாகாணங்களின் குளங்கள் வான் பாயும் வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.