இளவரசி டயானாவின் சூழ்ச்சி அம்பலம்!!

847

Diana

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானா, கமிலா பார்க்கருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளவரசர் ஹரியின் சுயசரிதையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்–டயானா தம்பதியினரின் இளைய மகன் இளவரசர் ஹரி, வரும் 15ம் திகதி தனது 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதை முன்னிட்டு இவரது சுயசரிதையை இளவரசர் “ஹரி சகோதரர், வீரர், மகன்” என்ற தலைப்பை கொண்ட புத்தகமாக அரச குடும்ப எழுத்தாளர் பென்னி ஜூனர் (Benny Junor) வெளியிடவுள்ளார்.

இந்த புத்தகத்தில் டயானா பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கூறியதாவது, டயானா தனது பிள்ளைகள் வில்லியம், ஹரியிடம் ‘உங்களை அதிகமாக நேசிப்பது யார்’ என்று அடிக்கடி கேட்பார்.

மேலும் குழந்தைகளிடம் தான் அமர்த்தியிருந்த பணிப்பெண்கள் யாரேனும் நெருங்கி பழகி விட்டால் அவரை வேலையிலிருந்து நீக்கிவிடுவார். இதற்கு காரணம் டயானாவின் அம்மா, ஒரு போதும் அவருக்கு தாயாக நடந்துகொண்டதில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

கமிலா வீட்டில் தனிமையில் இருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் உன்னை கொலை செய்ய ஒருவரை அனுப்பி உள்ளேன்.

அவர்கள் உன் தோட்டத்திற்கு வெளியே நிற்கிறார்கள் பார். ஜன்னலுக்கு வெளியே பார். நீ அவர்களைப் பார்க்கிறாயா என்றெல்லாம் கேட்டு மிரட்டி இருக்கிறார். டயானா குறித்த இந்த தகவல்கள் பிரித்தானிய முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.