
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்றையதினம் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு வலயத்தில் இருந்து 3231 பாடசாலை மாணவர்கள் தோற்றுவதோடு, 832 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் குறித்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.






