கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட மன்னார் இளைஞன் : பொலிஸ் அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது!!

201

கொழும்பு – ஜிந்துபிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது, கடந்த சனிக்கிழமை இரவு (14) இடம்பெற்றிருந்த நிலையில் மன்னாரை சேர்ந்த இளைஞன் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கடமை தவறியதற்காக நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவர் மீது துப்பாக்கிச் சூடு

சிகை அலங்கார நிலையமொன்றை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த எனப்படும் புளூமெண்டல் சங்க என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி – வெள்ளிமலை பகுதியை சேர்ந்த என தெரிய வந்துள்ளது.

தீவிர விசாரணை

குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவ தினம் சிகை அலங்கரிப்புக்கு சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 20 வயதுடைய மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.