
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் அல்–அமின் ஹூசைன் பந்து வீச்சு சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாக போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கார்டிப் அல்லது பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் 21 நாட்களுக்குள் அல்–அமின் ஹூசைன் ஆஜராகி பந்து வீச்சு சோதனைக்கு தன்னை உட்படுத்த வேண்டும்.
இந்த சோதனையின் முடிவை பொறுத்தே அவர் தொடர்ந்து பந்து வீசுவது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடுவரின் புகாருக்கு உள்ளாகும் 6வது வீரர் அல்–அமின் ஹூசைன் ஆவார்.
ஏற்கனவே சஜித்திர சேனாநாயக்க (இலங்கை), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), உத்செயா ( சிம்பாவே), சோஹக் காஜி (பங்களாதேஷ்), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) ஆகியோர் புகாரில் சிக்கி இருந்தனர்.





