உலக சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : இலங்கையில் 4 இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை!!

605

அமெரிக்க வர்த்தக கொள்கைகளை சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைமையால் உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதாக சர்வதேச நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. இந்த உயர்வு கடந்த மூன்று வார காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச விலை என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை 4 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் 22 கரட் தங்கத்தின் விலை 370,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.