காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானம்!!

439

Babyகுருணாகல் கனேவத்தையில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த சின தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை கடத்திச்சென்றமை தொடர்பில் உரிய தகவல்களை தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்

இது தொடர்பான தகவல்களை தருவோர் 0777223095 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இவரை கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது