அக்குரேகொட துப்பாக்கித்தாரியின் வாக்குமூலத்தில் சிக்கிய 48 கொலைகள் : குழப்பத்தில் பொலிசார்!!

44

அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கித்தாரி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தென் மாகாணம் உட்பட பல பகுதிகளில் சுமார் 48 பேரை கொலை செய்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் தான் என்றும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், மாலபே பகுதியில் ரூ. 200,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அன்றைய தினம் மொனராகலைக்கு தப்பிச்சென்றதும் தெரியவந்துள்ளது.இதன் பின்னர் அவர் அதிவேக நெடுஞ்சாலை வழியாக மத்தளையை அடைந்ததாகவும் கூறியிருந்தார்.

மொனராகலையின் நக்கல பகுதிக்கு சென்ற பிறகு, அழைத்துச்செல்ல அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நண்பரான கெலும் என்ற மற்றொரு சந்தேகநபர் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், துபாயிலிருந்து ஒருவர் கெலுமை அழைத்து, “ஒருவர் வருகிறார்… அவரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய சுத்தா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலைகள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

“ஐயா… சுத்தா என் கடவுள்.. நான் சுத்தாவுக்காக எதையும் செய்வேன்.. நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை..”, என்று சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடமிருந்து மேலும் வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.