திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்!!

201

புதிய இணைப்பு

ஈரான் – அமெரிக்க – இஸ்ரேல் போர் பதற்றத்தை தொடர்ந்து, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

முதலாம் இணைப்பு

மறு அறிவித்தல் வரை ஈரான் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம்

ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஜித் அகவன், மெஹர், “மறு அறிவிப்பு வரும் வரை நாட்டின் முழு வான்வெளியும் மூடப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

அதேநேரம், ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் போக்குவரத்து அமைச்சகம் தனது தேசிய வான்வெளியை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.