
அமெரிக்காவும் இஸ்ரேலும் வார இறுதியில் ஈரானை தாக்கத் தொடங்கியதிலிருந்து உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை மூடும் முடிவால் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் என தொழில்துறை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார் எனர்ஜி, அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனையடுத்து சடுதியாக எல்என்ஜி இயற்கை எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எல்என்ஜி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது. மேலும் கத்தார் அதன் எல்என்ஜி ஏற்றுமதியில் 90 சதவீதம் ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்கிறது.
சீனா, இந்தியா, தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவை எல்என்ஜி எரிவாயு விநியோகத்தில் அதிகம் பாதிக்கப்படும் ஆசிய நாடுகளில் அடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





