கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் : இளம் யுவதி கழுத்தறுத்து கொலை!!

259

கொழும்பு – கஹதுடுவ ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் யுவதியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புளத்சிங்கள, கோவின்ன, நாரகல வெடகே வட்டத்தில் வசித்து வந்த பணிபுரிந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆடைத்தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றியதாக கூறப்படும் சந்தேகநபர், கொலைக்கு பிறகு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண் கடந்த ஆண்டு ஆடைத்தொழிற்சாலையில் பணிக்கு வந்த நிலையில், சந்தேகநபர் 2024 ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.

பதுளை, கெப்பெட்டிபொலவை சேர்ந்த சந்தேகநபர், திருமணமானவர் எனவும், கொலை செய்யப்பட்ட யுவதியும், சந்தேகநபரும் சுமார் ஒரு வருடமாக காதல் உறவில் இருந்து வந்துள்ளனர்.

இதன்போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையினால் இளம் பெண் பல நாட்களாக சந்தேக நபரிடம் பேசாமல் தவிர்த்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை, ஆடைத்தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலில் இளம் யுவதிக்கும், சந்தேகநபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கழுத்தறுக்கு கொலையை செய்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளில், இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த பிறகு, சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துணிப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளம் யுவதி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இளம் பெண்ணின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.