கணவருக்கு 3 நாள் பழைய சாம்பாரை பரிமாறிய மனைவி : வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

31

பெங்களூருவில் பழைய சாம்பாரை பறிமாறியது தொடர்பாக நடந்த குடும்ப தகராறில் 27 வயது இளம் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த காவ்யா என்ற 27 வயது மனைவிக்கும் ரங்கசாமி என்ற அவரது கணவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 4 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த தம்பதி இடையே கடந்த வியாழக்கிழமை 3 நாள் பழைய சாம்பாரை பறிமாறியது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது கணவர் ரங்கசாமி மனைவி காவ்யாவை மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை தாக்கவும் முயன்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த காவ்யா, அவரது வீட்டு விவசாய பயன்பாட்டிற்காக வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு காவ்யா வாந்தி எடுத்ததை அடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றனர்.

ஆனால் துர்திஷ்டவசமாக மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.