வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!!

204

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (08.03.2026) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் அசங்க(61867), ரன்வெல(61518), மிதுசன்(91800), நிஜாம்(84963), றொசான்(86009) ஆகியவர்களை கொண்ட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.