இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு : வெளியான காரணம்!!

138

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இருதரப்பு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில் தற்போதைய பிராந்திய சூழ்நிலையால் எழும் விமானக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அறிவித்துள்ளது.

தொடர் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை முதன்முறையாக நடத்தும் இந்தத் தொடரில், ஆறு வெள்ளைப் பந்துப் போட்டிகள் இடம்பெற திட்டமிடப்பட்டது.

மூன்று டி20 சர்வதேசப் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 17 ஆகிய திகதிகளில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும், அதைத் தொடர்ந்து மார்ச் 20, 22 மற்றும் 25 ஆகிய திகதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி, குறித்த தொடரை இந்த ஆண்டின் இறுதிப் காலாண்டில் நடத்துவதற்குத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.