தடுமாறும் தங்கத்தின் விலை : இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

330

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.03.2026) 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 415000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 383800 ரூபாவாக காணப்படுகிறது.

உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5204.67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் ஏற்பட்டுள்ள புதிய நகர்வுகள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதும், முதலீட்டாளர்கள் லாபமீட்டலில் (Profit-booking) ஈடுபட்டுள்ளதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இதேவேளை வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 88.31 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி காரணமாக, கொழும்பு செட்டியார்தெரு மற்றும் ஏனைய உள்நாட்டுத் தங்கச் சந்தைகளிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.