
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட குருகல காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியான கால நிர்ணயத்திற்கு அமைய இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிரிஜ் மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகங்களின் மேற்கொள்ளப்பட்ட பீடா எனலடிக் என்ற கால நிர்ணய முறையின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போது இந்த மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வறண்ட மற்றும் ஈரவலய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் குருகல பிரதேசத்திற்கு அருகில் பெல்லான்பெதிபெலஸ்ஸ என்ற பகுதியில் ஏற்கனவே பண்டைய கால மனிதனின் எலும்புகள் கிடைத்திருந்தன.
இது 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் எலும்புகள் என கால நிர்ணய ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





