விமானத்தில் சத்தமாக வீடியோ பார்த்த பெண் : பாதியிலேயே இறக்கிவிட்ட ஊழியர்கள்!!

19

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஹெட்போன் அணியாமல் சத்தமாக வீடியோ பார்த்த பெண் ஒருவர் பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மியாமியிலிருந்து தம்பா நோக்கி செல்லவிருந்த அந்த விமானத்தில், ஒரு பெண் தனது மொபைலில் அதிக சத்தத்துடன் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துள்ளார்.

விமான ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும், அவர் ஹெட்போன் பயன்படுத்த மறுத்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமானத்திலிருந்து வெளியேற்ற முயன்றபோது அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் “வெறும் 30 வினாடிகள் மட்டுமே வீடியோ பார்த்தேன், இதற்காகவா என்னை இறக்கிவிடுகிறீர்கள்?” என அவர் கூச்சலிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியில் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது, மற்ற பயணிகள் கைதட்டி வரவேற்றனர். அதேசமயம் சமீபத்தில் ஹெட்போன் இன்றி ஆடியோ அல்லது வீடியோக்களை சத்தமாக பார்ப்பது விதிமீறல் என்றும், இதற்காக பயணிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.