இலங்கையில் தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம் : சர்வதேச சந்தையில் தலைகீழ் மாற்றம்!!

370

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது வெள்ளியின் விலையும் சுமார் 4 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தினத்திற்கான தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 406000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 375500 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.