
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குறுகிய காலகட்டத்திலே ஜீவா , பென்சில், டானா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் அடைந்து வருகிறார்.
சமீபத்தில் இவரின் பெயர் பிரச்சனையால் நடிகை ஸ்ரீ திவ்யா விபச்சாரத்தில் ஈடுபட்டு தற்போது கைது செய்ய பட்டர் என்ற தகவல் இணையதளத்தில் பரவி வந்தது. இதை அறிந்த ஸ்ரீதிவ்யா தனது தரப்பிலிருந்து ஒரு தெளிவான விளக்கத்தை உடனே அனுப்பியுள்ளார்.
அதாவது திவ்யஸ்ரீ என்ற பெயரில் கைதான நடிகையின் பெயரை என் பெயரோடு சேர்த்து குழப்பி வருகிறார்கள் சிலர். சில இணையதளங்களில் என் படத்தையே வெளியிட்டுள்ளனர். தயவு செய்து தெளிவாக விசாரித்து எழுதவும்.
நான் ஸ்ரீதிவ்யா. திவ்யஸ்ரீ அல்ல என அதில் விளக்கம் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் ஓஹோ என உச்சத்துக்குப் போய்விட்டவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அவர் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகின்றார்.





