
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் அண்ணன் மற்றும் சகோதரி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதிக்கு திருமணமாகி இரு மாதங்கள் ஆகின்ற நிலையில் , இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்தில் யாழ் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனும் அவரது சகோதரியான 19 வயதான யுவதியுமே உயிரிழந்துள்ளனர்.
அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசர் மோதி விபத்து ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் விபத்தினால் உயிரிப்போர் எண்ணைக்கை அதிகரித்துள்ளதாக அண்மையில் இலங்கை பொலிஸ் திணக்களம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.





