
வவுனியா வேப்பங்குளத்தில் இரு இளைஞர்களுக்கிடையிலான மோதலில் வர்த்தக நிலையத்தில் சில பொருட்கள் சேதமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்னர்தாக குறித்த இரு இளைஞர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் பிரிதொரு காரணத்தினால் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவ் இளைஞரில் ஒருவர் இன்று காலை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்ற சமயத்தில் மற்றைய இளைஞர் இவ் இளைஞருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தமையுடன் அது கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் ஒர் இளைஞனின் தலையில் காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் கைகலப்பினால் வர்த்தக நிலையில் சில பொருட்களும் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளரினால் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





