வவுனியா நெளுக்குளத்தில் தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம் தேசிய வேலை திட்டம் 2026!!

240

வவுனியா பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” வேலைத் திட்டத்திற்காக நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் பாலாமைக்கல் கிராமம் தெரிவு செய்யப்பட்டு திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வும் வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிசாளர் S.C.வீரக்கோன், உதவி பிரதேச செயலாளர் திருமதி பு.உமாநந்தினி, நிர்வாக கிராம அலுவலர் ம. ஞானேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் கார்த்தீபன் மற்றும் கணபதி, கிளீன் சிறிலங்கா இணைப்பாளர் விஜயகுமார்,

நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் அதிபர், வவுனியா தொழில்நுட்ப கல்லூரி அதிபர், நெளுக்குளம் பொலிஸ், நெளுக்குளம் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்,

பிரதேச செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,N H D A பணிப்பாளர், பிரஜா சக்தி தலைவர் குகேசன், பிரதேச செயலக வெளிக்கள அலுவலர்கள், நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் அனைத்து கிராமங்களில் உள்ள கிராம மட்ட அமைப்புகள் பாலாமைக்கல் கிராம மக்கள் மற்றும் இவ்வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள மாதிரி கிராம குழு தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேற்படி கிராமத்திற்கான “சமுதாய உற்பத்தித் திறன் தொடர்பான தெளிவூட்டல்’ உதவிப் பிரதேச செயலாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திட்ட முன்மொழிவு சிறப்பு அறிக்கை உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரினால் உதவி பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிசாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சமூக உற்பத்தி திறன் குழு உறுப்பினரின் நன்றியுரையுடன் இனிதே இந்நிகழ்வு நிறைவுற்றது.