
உலகளாவிய தங்க விலைகளின் வீழ்ச்சிக்கு இணையாக இலங்கையிலும் தங்க விலை வீழ்ச்சிப் போக்கினை பதிவு செய்து வருகிறது.
அதன்படி, கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்று (19.03.2026) பிற்பகல் நிலவரப்படி 362500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9000 ரூபா குறைந்திருந்த நிலையில், அந்த போக்கை தொடர்ந்து, இன்று பிற்பகல் மேலும் 4000 ரூபா குறைந்துள்ளது.
நேற்று (18) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 374400 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 362500 ரூபாவாக காணப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று 407,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 394000 ரூபாவாக குறைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (19.03.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4843 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவலின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 366200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 398000 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





